ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கிருஷ்ணர் ரத யாத்திரை

கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் இருந்து கிருஷ்ணர் ரத யாத்திரை தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கிருஷ்ணர் ரத யாத்திரை
x
இந்நிலையில், இந்த யாத்திரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணர் ரத யாத்திரையை கண்டு தரிசனம் செய்தனர்.

ஆரியபாப்பாத்தி அம்மன் கோயில் வைகாசி திருவிழா 
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஆரியபாப்பாத்தி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா நடைபெற்றது. காளியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பூப்பல்லக்கு காரிய சித்தி தரும் ஆரியபாப்பாத்தி கோவிலை சென்றடைந்ததும், அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த பூச்சொரிதல் விழா பவனியின் போது சிவன் வதம் செய்வது போன்ற பிரமாண்ட சிலை வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. இது பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

தர்மராசா பாஞ்சாலி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
புதுச்சேரி திலாசுப் பேட்டையில் உள்ள தர்மராசா பாஞ்சாலி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.  

மழை பெய்ய வேண்டி ஊரணி பொங்கல் விழா 
கும்பகோணம் அருகே மேலக் கொட்டையூரில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில், வெயில் தணிந்து  நல்ல மழை பெய்ய வேண்டி ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது. இந்த ஊரணி பொங்கல் விழாவில் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

படைவெட்டி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். 

பூதத்தார் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
நெல்லை மாவட்டம் பணகுடி சங்கிலி பூதத்தார் கோவில் விழாவில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு நடத்தப்பட்ட அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்தனர். பின்னர் முக்கிய நிகழ்வாக மஞ்சள் கலந்த கொதிக்கும் நீரில் பக்தர்கள் நீராடினர்.



Next Story

மேலும் செய்திகள்