"ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவோம்" - நாம் தமிழர் கட்சி 3.88 % வாக்குகளை பெற்று அழுத்தமான தடம்
பதிவு : மே 25, 2019, 02:13 AM
மாற்றம் : மே 25, 2019, 02:34 AM
ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என பிரகடனம் செய்து தேர்தலை சந்தித்தது நாம் தமிழர் கட்சி. பண பலம், சமூக பின்னணி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதுடன், ஆண்களுக்கு இணையாக 50 சதவீதம் பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியது.
நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தனது தேர்தல் பிரசார கூட்டங்களில், மக்கள் மத்தியில் மன மாற்றத்தை உருவாக்க இந்த தேர்தலை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அவரது நம்பிக்கை பிரகாசமாக உள்ளதை கணிக்க முடிவதாக பலரும் கூறுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் 6-வது இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி, தற்போது பல தொகுதிகளில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள்,  60 ஆயிரத்து 575 வாக்குகளை பெற்றுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் 30 ஆயிரத்து 886 வாக்குகளை பெற்றுள்ளார். தென் சென்னை தொகுதியில் ஷெரீனுக்கு 50 ஆயிரத்து 222 வாக்குகள் கிடைத்துள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரனுக்கு 84 ஆயிரத்து 979 வாக்குகளும், திருவள்ளூர் தொகுதியில் வெற்றிச் செல்விக்கு, 65 ஆயிரத்து 416  வாக்குகளும் கிடைத்துள்ளது. திண்டுக்கல் தொகுதியில் கவனம் ஈர்த்த நடிகர் மன்சூர் அலிகான்  54 ஆயிரத்து 957  வாக்குகளைப் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் சிவரஞ்சனிக்கு 62 ஆயிரத்து 771 வாக்குகள் கிடைத்துள்ளது.  மதுரையில் போட்டியிட்ட பாண்டியம்மாளுக்கு 42 ஆயிரத்து 901 வாக்குகளும், கோவை தொகுதியில் போட்டியிட்ட எஸ்.கல்யாணசுந்தரத்துக்கு  60 ஆயிரத்து 519 வாக்குகளும் கிடைத்துள்ளது. நாகையில் போட்டியிட்ட மாலதி 51 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்றுள்ளார். சிவகங்கையில்,  சாந்தி பிரியாவுக்கு 72 ஆயிரத்து 240 வாக்குகளும், திருச்சியில் போட்டியிட்ட விநோத்துக்கு  65 ஆயிரத்து 286 வாக்குகளும் கிடைத்துள்ளது. விருதுநகர் தொகுதியில் அருள்மொழித் தேவனுக்கு  53 ஆயிரத்து 40 வாக்குகள் கிடைத்துள்ளது.  மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் நான்காவது இடத்தினை பதிவு செய்துள்ளதுடன், ஓட்டுமொத்தமாக 16 லட்சத்து 45 ஆயிரத்து 185  வாக்குகளை நாம் த​மிழர் கட்சி பெற்றுள்ளது. நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம் என பிரசார கூட்டங்களில் பேசிய சீமானின் பேச்சு, வேடிக்கை அல்ல என்பதை அக்கட்சி பெற்றுள்ள வாக்குகள் உறுதி செய்துள்ளன  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1256 views

பிற செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...

4 views

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்

வேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

5 views

திருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...

திருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.

14 views

மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

12 views

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி...

கரூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

19 views

விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் : தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

'சிவகாசி' என்ற பெயர் வரக் காரணமான விசுவநாத சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.