"செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வேண்டும்" - தொழிலாளர்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செங்கல் தயாரிப்புக்கு மண் எடுக்க அனுமதி இல்லாததால், சூளை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செங்கல் தயாரிப்புக்கு மண் எடுக்க அனுமதி இல்லாததால், சூளை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொண்டையம்பாளையம், அத்தியப்ப கவுண்டன்புதூர், சின்னட்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்க, வருவாய் மற்றும் கனிமவளத் துறை அனுமதி பெற வேண்டும். தேர்தலை காரணம் காட்டி, சில மாதங்களாக அனுமதி வழங்காததால், செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது. வெயில் காலம் மட்டுமே செங்கல் சூளை பணிக்கு ஏதுவானது என்பதாலும், தேர்தல் முடிந்துவிட்டதாலும், மண் எடுக்க உடனடியாக அனுமதி வழங்குமாறு தொழிலாளர்கள் கோரியுள்ளனர். ஆதாரப் பொருளான மண் எடுக்க அனுமதி வழங்காவிட்டால், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன், குடும்பத்துடன் பட்டினி கிடக்க நேரிடும் என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்