பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு
x
நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். வடமாநிலங்களில், பல இடங்களில் பாதுகாப்பு இன்றி  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு காரில் இருந்து சில மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, உபரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் என அதிகாரிகள் கூறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் எடுத்துச் சென்ற போது தடுத்து கேட்ட மக்களிடம், பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியது தொடர்பாக அதிகாரிகளால் முறையான பதில் ​சொல்ல முடியாத நிலை நிலவுயது.  இதேபோன்று வாக்குப்பதிவுக்கு முன்பே, தலித் மக்களுக்கு மை இடப்பட்ட 
ச​ந்தோலியிலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒரு கடையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று காசிபூரில், ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்த்த எம்.ஜி.பி. கட்சி வே​ட்பாளர் அந்த வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டு உள்ளதாக தெரி​வித்தார்.


Next Story

மேலும் செய்திகள்