செல்போன் திருடிய மூவர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் திருடிய மூவர் கைது
x
திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர்    எர்ணாவூர் பகுதியிலிருந்து பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று  கொண்டிருந்த போது  ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர் அவரிடமிருந்து  செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.  இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவின் உதவியால் அந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன், மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்