உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு : இலங்கை படைப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலை கழகத்தில் இரண்டாவது உலக குழந்தைகள் இலக்கிய மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது.
உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு : இலங்கை படைப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலை கழகத்தில் இரண்டாவது உலக குழந்தைகள் இலக்கிய மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் குழந்தை இலக்கிய படைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை குழந்தை இலக்கிய படைப்பாளர் குணநாதன், தமிழில் குழந்தை இலக்கியம் வளரவில்லை என்று கூறினார். குழந்தைக்கான புத்தகம் உருவாக்குவவதென்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பதுக்கு ஒப்பானது என்று அவர் தெரிவித்தார். குந்தை இலக்கிய நூலை வடிவமைப்பது நல்ல கருவமைப்பது போன்றது என்று அவர் கூறினார். எழுத்துருவம், ஓவியம், வடிவமைப்பு போன்ற எல்லா படிமங்களையும் சேர்த்துதான் குழந்தை இலக்கியமாக கருத வேண்டியுள்ளதாகவும், தற்போது குழந்தை இலக்கியம் அப்படி படைக்கப்பட வில்லை என்றும் குணநாதன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்