வரத்து குறைவு எதிரொலி...காய்கறிகள் விலை 2 மடங்கு உயர்வு

கோடையின் தாக்கத்தால் வரத்து குறைந்ததையடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறின் விலை 2 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
x
கோடையின் தாக்கத்தால் வரத்து குறைந்ததையடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறின் விலை 2 மடங்கு வரை அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 1 கிலோ தக்காளி விலை, 35 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் 1 கிலோ பச்சை மிளகாய் விலை 25 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் 1 கிலோ கேரட் 38 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 

1 கிலோ கத்தரிக்காய் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் 1 கிலோ இஞ்சி 80 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும்,  உருளைக்கிழங்கு விலை 12 ரூபாயில் இருந்து  23 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் உற்பத்தி குறைந்து வரத்து சரிவடைந்துள்ளதே விலையேற்றத்துக்கு காரணமாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலையேற்றம் மே மாதம் இறுதி வரை தொடரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்