தென்பெண்ணை ஆற்றில் கோதண்டராமர் சிலை நிறுத்தி வைப்பு - குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றில் கோதண்டராமர் சிலை நிறுத்தி வைப்பு - குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்
x
திருவண்ணாமலை கொரகோட்டை கிராமத்தில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒசூர் பேரண்டப்பள்ளியை வந்தடைந்த இந்த சிலை, பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் தெண்பெண்ணை ஆற்றின் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு சிலை கடந்து செல்ல வசதியாக தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கர்நாடகாவில் பெய்த மழையால் ஆற்றில் பெருக்கெடுத்து ஒடிய நீர் காரணமாக தற்காலிக மண்பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது மண்பாலத்தை மீண்டும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலப்பணிகளால் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கோதண்டராமர் சிலை பேரண்டப்பள்ளியில் 9வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்