சென்னை பெருநகராட்சி தெருக்களில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை - அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் புகார்

ஆவடி நகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சுமார் 140 டன் குப்பைகள் என்ற வீதத்தில் மாதம் நான்காயிரத்து 200 டன் குப்பைகள் சேருகின்றன.
சென்னை பெருநகராட்சி தெருக்களில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை - அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் புகார்
x
சென்னை ஆவடி பெரு நகராட்சிக்கு உட்பட்ட ஆவடி, பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, விளிஞ்யம்பாக்கம்,  திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு,  அண்ணனூர், பட்டாபிராம்,  கோவில் பாதாகை, மிட்டினமல்லி, முத்தா புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில், சுமார் நான்கு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆவடி நகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சுமார் 140 டன் குப்பைகள் என்ற வீதத்தில், மாதம் நான்காயிரத்து 200  டன் குப்பைகள்  சேருகின்றன. இதனை170 நகராட்சி ஊழியர்கள் மற்றும் 700 ஒப்பந்த ஊழியர்கள் சேகரித்து, சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இந்நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் ஆவடி நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் குப்பைகள் குவிந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்