கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் பட்டர் புரூட் எனும் 'அவக்கோடா'

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் அவக்கோடா பழங்கள் காய்த்து குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வசீகரித்துள்ளது.
கொடைக்கானலில் காய்த்து குலுங்கும் பட்டர் புரூட் எனும் அவக்கோடா
x
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் அவக்கோடா பழங்கள் காய்த்து குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வசீகரித்துள்ளது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த வெள்ளையர், குளிர் பிரதேசங்களில் வளரும் பேரி, பிளம்ஸ், ஆரஞ்சு, மலை வாழை உள்ளிட்ட கனி மரங்களை அங்கு நட்டனர். பேத்துப்பாறை, பெருமாள்மலை, பண்ணைகாடு, பெரும்பள்ளம் பகுதிகளில் காய்த்து குலுங்கும் பட்டர் புரூட் என்ற அவக்கோடா பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளன. அவை கோவா, கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதியாகிறது. முகப் பொலிவு பொருட்கள் தயாரிக்க இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.ஜூன் மாதம் முதல் ஜனவரி வரை விளையும் பட்டர் புரூட்டுக்கு போதிய விலை கிடைப்பதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்