அதி நவீன அச்சு இயந்திரம்: பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் தொடங்கி வைத்தனர்

திருச்சி தினத்தந்தி பதிப்புக்கு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன அச்சு இயந்திரத்தின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
x
தினமும் 2 கோடியே 40 லட்சம் வாசகர்களுடன், மாநில மொழியில் முதலிடத்திலும், தேசிய அளவில் 4-வது இடத்தையும் தக்க வைத்துள்ள, தினத்தந்தி நாளிதழ், பத்திரிகை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது. பத்திரிகை உலகில் புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது, தினத்தந்தி... அந்த வகையில், திருச்சி தினத்தந்தி பதிப்புக்கு, புதிய அதி நவீன அச்சு இயந்திரம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துவாக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தினத்தந்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் தந்தி டி.வி.யின்   இயக்குனர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் அதிநவீன அச்சு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தனர். முன்னதாக, புதிய கட்டிடத்திற்கு கிரகஹ பிரவேசம் நடத்தப்பட்டது. 

ஒரே நேரத்தில் 20 பக்கங்கள் அச்சிடும் வசதி 

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 'செயிகென் 450' என்கிற புதிய அச்சு இயந்திரமானது பல அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 20 பக்கங்களை அச்சிடும் வசதி உள்ளது. ஒரு மணி நேரத்தில் 40 ஆயிரம் பிரதிகள் அச்சிட முடியும். அனைத்து பக்கங்களிலும் பல வண்ணங்களில் அச்சடிக்க கூடிய வசதியும் இந்த இயந்திரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்