துபாய் - சென்னை கடத்தி வரப்பட்ட குங்குமப்பூ பறிமுதல்
பதிவு : மே 17, 2019, 08:55 AM
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, குங்குமப்பூவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த விமானத்தை, சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் துணிகளுக்கு இடையே ஈரான் நாட்டு குங்குமப்பூவை,  கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அதிகாரிகள், 60 லட்ச ரூபாய் மதிப்பிலான குங்குமப்பூவை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த சாகுல் அமீதிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.