"ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கிலி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து லட்சக்கனக்கான மக்களை திரட்டி மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கிலி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை
x
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து லட்சக்கனக்கான மக்களை திரட்டி  மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி டெல்டா பகுதியில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது பேராபத்தை விளைவிக்கும் என்று குற்றஞ்சாட்டினார். இதனை கண்டித்து ஜூன் மாதத்தில் விழுப்புரம் முதல் திருவாரூர் வரை லட்சக்கணக்கான மக்களை  திரட்டி மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்