காணாமல்போன பச்சை நிற மரகத லிங்கம் கிடைத்தது...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை நிற மரகதலிங்கம், ஜமீன்தார் பங்களா தண்ணீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
x
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கோட்டை பகுதியில் உள்ள  மனோன்மணியம்மன் ஆலயம், வேட்டவலம் ஜமீன் மகேந்திர பந்தாரியார் கட்டுப்பாட்டில் பல நூறு ஆண்டுகளாக உள்ளது. இந்த கோயிலில்  பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரை அடி உயரமுள்ள பச்சை மரகதலிங்கம் உண்டு. கடந்த 2017-ஆம் ஆண்டு கோவில் குருக்கள் ஒரு நாள்  கோயிலை திறந்து பார்த்த போது கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரையடி பச்சை மரகலிங்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அம்மனின் தங்க தாலி, வெள்ளியால் ஆன ஒட்டியானம்,  கிரீடம், நாகாபரணம் ஆகியவை கொள்ளையடிக்கபட்டது தெரியவந்துள்ளது. இந்த  வழக்கில் கூடுதல் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் தனிபடை அமைக்கபட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜமீனில் வேலை செய்த பச்சையப்பன் கொடுத்த தகவலின் பேரில், தண்ணீர் தொட்டியில் இருந்த லிங்கத்தை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பொன்மாணிக்கவேல், சிலை திருடு போன கோயிலில் நேரில் ஆய்வு செய்தார். மரகதலிங்கம் அங்கு எப்படி வந்தது, யார் கொண்டு வந்து வைத்தனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்