ஒரே நாளில் பி.எட் மற்றும் தகுதி தேர்வு : எதை எழுதுவது? - மாணவர்கள் குழப்பம்

ஆசிரியர் கல்வியியல் மற்றும் தகுதி தேர்வு, ஒரே நாளில் நடைபெற உள்ளதால், எதில் பங்கேற்பது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஒரே நாளில் பி.எட் மற்றும் தகுதி தேர்வு : எதை எழுதுவது? - மாணவர்கள் குழப்பம்
x
2017ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான், ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம் எட்டு, ஒன்பது ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பிஎட் கடைசி ஆண்டு தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், இரண்டு தகுதி தேர்வுகளையும் எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி ஆசிரியர் கல்வியியல் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தேர்வுகளும் மிக முக்கியம் என்பதால் எதை எழுதுவது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அடுத்த மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்