தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம்

வாக்கு எண்ணிக்கை நாளில் டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
x
வாக்கு எண்ணிக்கை நாளில் டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 7 கட்டமாக நடைபெற்று வரும் 17-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினம் மாலை டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு,  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்