இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த புளியமரம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த புளியமரம்
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதில், இடி தாக்கியதில், தண்ணீர் பள்ளம் என்னும் இடத்தில் இருந்த பழமையான புளியமரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. கொட்டும் மழையிலும், புளியமரம் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், புளியமரத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் மரமானது, முற்றிலும் எரிந்து கருகியது.


Next Story

மேலும் செய்திகள்