ஹைட்ரோகார்பன் பணிகளை ஆய்வு செய்ய நடுநிலை குழு அமைக்க வேண்டும் - மு. ராம்குமார்

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தவறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் சித்தரிக்கப்படுவதாக மு. ராம்குமார் கூறினார்.
x
தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்,  ஹைட்ரோகார்பன் அகழ்வு பணிகளை கண்காணிக்க அறிவியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூால் அறிஞர்களை கொண்ட நடுநிலையான குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழுவினர் மக்கள் மத்தியில் வெளிப்படையான விளக்கம் அளித்தால் ஹைட்ரோகார்பன் குறித்த குழப்பங்களும், அச்சமும் நீங்கும் என்றும் குறிப்பிட்டார்.பெட்ரோலிய பொருட்கள் அவசியமாக உள்ளதால், திறந்த வெளி சுரங்கம் அமைக்காமல் நவீன முறையில் ஹைட்ரோகார்பன்  எடுக்கப்படுவதாகவும், தலைவலி, காய்ச்சல் மாத்திரைகள் மற்றும் மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள்ஹைட்ரோகார்பன் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாகவும் எனவும் ராம்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்