2 ஆண்டுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் : கோயில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் மீட்டெடுப்பு
பதிவு : மே 16, 2019, 02:59 AM
திருவண்ணாமலை ஜமீன் பங்களாவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் அதே பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வேட்டவலம் கோட்டை அருகே  உள்ள மனோன்மனியம்மன் ஆலயத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரையடி பச்சை மரகலிங்கம் மற்றும் அம்மன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வந்த நிலையில், ஜமீன் பங்களாவில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் காணாமல் போன மரகத லிங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட சிலையை திருப்பி கொண்டு வந்து வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பிற செய்திகள்

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

9 views

விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

6 views

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

11 views

நூலகத்தில் "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

6 views

சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

25 views

கற்பித்தலில் புதிய வழிமுறைகள்... ஆர்வமுடன் கற்கும் குழந்தைகள்

கரூர் அரசு தொடக்கப் பள்ளி கற்பித்தலில் புதிய வழிமுறைகளை கையாண்டு அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.