எழிலை இழக்கும் தொட்டபெட்டா மலை சிகரம்...

இயற்கை எழில் கொஞ்சும் தொட்டபெட்டா மலைச் சிகரம் எழில் இழந்து வருவதாகவும் அங்கு செல்வதற்கான சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதிபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எழிலை இழக்கும் தொட்டபெட்டா மலை சிகரம்...
x
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தொட்டபெட்டா மலைச் சிகரம். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 633 மீட்டர் உயரத்தில் உள்ளதால் மிகவும் உயரமான மலைச் சிகரம் என்கிற பெருமை பெற்றுள்ளது. அங்கிருந்து நீலகிரி மலைத் தொடரின் அழகையும், சோலைவனக் காடுகளின் இயற்கையையும் ரசித்து பார்க்க முடியும் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், அங்கு செல்வதற்கான 4 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தவில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் கண்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தொலை நோக்கி பழுதாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்