பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் : புகார் தெரிவிக்க புதிய குழு அமைப்பு

பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார் தெரிவிக்க, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் : புகார் தெரிவிக்க புதிய குழு அமைப்பு
x
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, சில பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களை பெற்று ஆய்வு நடத்துவதற்காக தொழில்நுட்ப கல்வி கூடுதல் இயக்குநர் அருளரசு தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் செந்தில், இளையபெருமாள், மற்றும் கோவை பொறியியல் கல்லூரி பேராசிரியர் தாமரை ஆகியோர் இந்த புது குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது தொடர்பான புகார்களை இந்த குழுவிடம் மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் 044- 22351018, 22352299,செல்போன் எண் 7598728698 ஆகியவற்றில் குழுவின் தலைவரை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் கூறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்படும் புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய குழுவின் தலைவர் அருளரசு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்