சாலையை ஆக்கிரமித்த ரசாயன கழிவு நுரை

நாமக்கல் அருகே திருமணிமுத்தாற்றில், பொங்கி வழியும் வெள்ளைநுரை சாலையில் மலைபோல் படர்ந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
x
மின்னக்கல் வழியாக பாய்ந்தோடும் திருமணிமுத்தாறில், சாயப்பட்டறை, ஆலை மற்றும் சாக்கடை கழிவுகள் கலப்பதால் ஆற்றுநீர் முற்றிலும் ரசாயன கலவையாக மாறி உள்ளது. இதனால், ஆற்றில் பொங்கி வழியும் வெள்ளை நுரை சாலையில் மலைபோல் படர்ந்து கிடக்கிறது. வெள்ளை நுரையில் ஆற்றுபாலம் மூழ்கியதால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள் வேறு வழியாக சென்றனர். அவசர தேவைக்கு செல்பவர்கள், வெள்ளை நுரையை அப்புறப்படுத்தினால், மீண்டும் ஒரு மணி நேரத்தில் சாலையை ஆக்கிரமித்து கொள்வதாக கூறுகின்றனர். ரசாயன கழிவால் விஷமாகும் ஆற்றுநீரை பாதுகாக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்னக்கல் பகுதி மக்களின் வேண்டுகோளாகும். 

Next Story

மேலும் செய்திகள்