10 % இட ஒதுக்கீடு - சான்று வழங்க தமிழக அரசு உத்தரவு

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு தகுதி உள்ளவர்களுக்கு சான்று அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
x
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு தகுதி உள்ளவர்களுக்கு சான்று அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில்10% இட ஒதுக்கீடு வழங்கும் நெறிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் கொண்டவர்கள் தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு மேல் விளைநிலம், ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை கொண்டோருக்கு சலுகை இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் சொத்துகளை வ‌ருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்துவர் என்றும் அனைத்து வகை குடும்ப வருமானமும் கணக்கில் கொண்டு தாசில்தாரால் சான்று அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து சான்று வழங்கியதும், அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் ஆய்வு நடத்தி, தகுதி உள்ளோருக்கு சான்று அளிக்கவும் அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்