உரிய வயதை எட்டாத மாணவிக்கு திருமணம் : மாணவியை மீட்டு அழைத்து சென்ற அதிகாரிகள்
பதிவு : மே 11, 2019, 02:58 PM
தருமபுரி அருகே குழந்தை திருமணம் செய்த மாணவியை மீட்ட சைல்டு லைன் குழுவினரை உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பவளந்தூர் கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு பெற்றோர்கள் ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக தொலைபேசி மூலம் சைல்டு லைன் குழுவினருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற மாவட்ட சைல்டு லைன் குழுவினர், திருமண வயதை எட்டாத அந்த மாணவியை மீட்டு குறிஞ்சி நகரில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். 

அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தில் சென்ற போது, அங்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சைல்டு லைன் குழுவினரை சரமாரியாக தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் மாணவியை அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சைல்டு லைன் குழுவினர், இந்த சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1608 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5176 views

பிற செய்திகள்

வங்கிகளில் மோசடி : "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார்.

10 views

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

18 views

தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

141 views

"பால் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும்" - டி.கே.எஸ். இளங்கோவன்

பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

11 views

ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

104 views

ஊராட்சி அலுவலக தளவாட பொருள்கள் திருட்டு - ஊராட்சி அலுவலர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் புளியம்பட்டி ஊராட்சியில் தளவாட பொருள்களை திருடி விற்றதாக ஊராட்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.