ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா? - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்ட மறுப்பு

பழைய நடைமுறையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் பள்ளிகல்வித்துறை பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில், இரண்டு மொழிப்பாடங்களுக்கு பதிலாக, ஒரே ஒரு பாடத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மொழிப்பாடத்தில் தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை எனவும் பழைய நடைமுறையே தொடரும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தந்தி டி.வி.க்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்