ஷவரில் உற்சாக குளியல் போடும் கோயில் யானை
பதிவு : மே 10, 2019, 04:56 PM
திருவாரூரில் கோயில் யானை ஒன்று ஷவரில் உற்சாகமாக குளியல் போடும் காட்சி காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோயில் யானையான செங்கமலத்தை பராமரிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பிரேத்தியேக முறையில் குளிக்க ஷவர், உடற்பயிற்சி, விளையாட்டு என செங்கமலத்தில் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை செலுத்தும் முயற்சிகளை கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. தலையில் முடியுடன் வலம் வரும் இந்த யானை, தண்ணீரில் உற்சாகமாக விளையாடியவாறு குளித்து மகிழ்கிறது.குறிப்பாக செங்கமலத்தின் தலைமுடியை தனி கவனம் செலுத்தி பராமரிப்பதாக யானை பாகன் ராஜா கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.