செல்போன் எண்ணை பிளாக் லிஸ்லிட்டில் போட்டதுக்கு கொலை செய்த காதலன்

விருதாச்சலம் அருகே, கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
x
பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர், கருவேப்பிலங்குறிச்சி என்ற ஊரில் டீக்கடை ஒந்றில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால், அங்கு வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.  சுந்தரமூர்த்தியின் மகள் திலகவதி, விருத்தாசலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளம்நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 8ஆம் தேதி திலகவதி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் திலகவதி  கைகள் மற்றும் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த  திலகவதியின் தந்தை  தனது  மகள் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். திலகவதியை  உடனடியாக கார் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

கல்லூரி மாணவி திலகவதியை கொலை செய்த வழக்கில் பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் ஆகாஷ் என்ற இளைஞரை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண் கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திலகவதியும், ஆகாஷும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்ததும், தற்பொழுது திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும், ஆகாஷ் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் படித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக கிரிக்கெட் விளையாட சென்ற ஆகாஷ், திலகவதியிடம் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த திலகவதி, ஆகாஷ் செல்போன் எண்ணை பிளாக் லிஸ்லிட்டில் போட்டதாகவும் ஆகாஷ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி திலகவதி வீட்டிற்கு  சென்ற ஆகாஷ், திலகவதியிடம் கேட்டபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,  ஆகாஷ் கத்தியால் திலகவதியை வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்ட பெண்ணும், கைது செய்யப்பட்ட இளைஞரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது, இதனால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்