களவாணி - 2 பட வெளியீட்டு விவகாரம் : தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது இயக்குநர் சற்குணம் புகார்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் களவாணி பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் காம்ரன் ஆகியோர் மீது இயக்குனர் சற்குணம், கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.
களவாணி - 2 பட வெளியீட்டு விவகாரம் : தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது இயக்குநர் சற்குணம் புகார்
x
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் களவாணி பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் காம்ரன் ஆகியோர் மீது இயக்குனர் சற்குணம், கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். அவர் தமது புகாரில், மே 23-ஆம் தேதி  படத்தை வெளியிட இயக்குனர் சற்குணம் திட்டமிட்டதாகவும், அதற்கு, தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் காம்ரன் சமூக வலைதளங்களிலும் விநியோகஸ்தர்களிடமும் தவறான தகவலை பரப்பி, பட வெளியீட்டை தடுப்பதாகவும், புகாரில் கூறியுள்ளார். நடிகர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு, இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு, களவாணி இரண்டாம் பாகம் வெளியாக பிரச்சனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்