தமிழக நலன்களை முதல்வர் அடகு வைத்து விட்டார் - முத்தரசன்

தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக மற்றும் பாஜகவினர் தங்களுக்குள்ளேயே குற்றம் சாட்டி கொள்ளவார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
தமிழக நலன்களை முதல்வர் அடகு வைத்து விட்டார் - முத்தரசன்
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து முத்தரசன் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக நலனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் அடகு வைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் அதிமுகவை மிரட்டி 5 நாடாளுமன்ற தொகுதிகளை பாஜக பெற்றதாகவும் வரும் 23ம் தேதிக்கு பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறை கூறி அறிக்கை வெளியிடுவார்கள் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்