"மத்தியில் மாற்று அரசு அமைந்தால், தமிழகத்திலும் மாற்று அரசு" - முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி

சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் பிரசார கூட்டம் நடைபெற்றது.
x
சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ப.சிதம்பரம், திமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி என்றும் எந்த சந்தர்ப்பவாதமும் கிடையாது என்று கூறினார். மத்தியில் மாற்று அரசு அமைந்தால் மறுநாளே தமிழகத்திலும் மாற்று அரசு அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்