திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு குழு நியமிக்கப்பட்ட விவகாரம் : குழு நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக இயக்குனர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு குழு நியமிக்கப்பட்ட விவகாரம் : குழு நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக இயக்குனர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ​வைத்தியநாதன் முன்பு, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையிட்டார். அப்போது நீதிபதி மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார். இதனிடையே, தனி அதிகாரி சேகர் நியமனத்தை எதிர்த்த வழக்கு விசாரணை, அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்