கமல் பிரசாரத்துக்கு தடை கோரி புகார்

சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை விதிக்க கோரி பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கமல் பிரசாரத்துக்கு தடை கோரி புகார்
x
கோவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் பணிக்கு சென்ற மக்கள் நீதி மய்ய  உறுப்பினர் பாலமுருகன் என்பவர் கட்சி பூத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் பாலமுருகனின் மனைவி சூலூர் தொகுதியில் கமலஹாசன் பரப்புரைக்கு தடைகோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், தொண்டனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காத தலைவர் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்