மின்தடையால் 5 பேர் உயிரிழந்த விவகாரம் : ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து நூதன போராட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மின்தடையால் 5 பேர் உயிரிழந்த விவகாரம் : ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து நூதன போராட்டம்
x
மதுரையில் கடந்த 7 ஆம் தேதி இரவு பெய்த கன மழையால் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டது. இதில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்