சிவகங்கை : இலவச ஓவிய பயிற்சி முகாம் - மாணவர்கள் ஆர்வம்

நவீன ஓவியங்களை நுணுக்கமாக வரையும் இலவசப் பயிற்சியில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தினர்.
சிவகங்கை : இலவச ஓவிய பயிற்சி முகாம் - மாணவர்கள் ஆர்வம்
x
சிவகங்கையில் மாவட்ட ஓவிய ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கினார். கோடை விடுமுறையை பயனுள்ளதாக பயன்படுத்தும் விதமாக இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒருவாரம் நடைபெற்ற இந்த முகாமில், பென்சில் ஓவியம், கோட்டோவியம், நிழலோவியம், வண்ணம் தீட்டும் ஓவியம், வாட்டர் கலர் எனும் நீர்வண்ண ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. தேவையற்ற பொருட்களை வைத்து கைவினை பொருட்கள் தயாரிப்பு, காகிதங்களை வைத்து புதிய பொருள் வடிவமைத்தல், ஆர்ட் & கிராப்ட் என  மனதை வளப்படுத்தும் இந்தப் பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கற்றுக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்