தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவஞ்சலி கூட்டம் - அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவஞ்சலி கூட்டம் - அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபுதொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து நினைவஞ்சலி கூட்டத்தை மே 22 ஆம் தேதி தனியார் உணவகத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த நீதிபதிகள் அனுமதி வழங்கினர். அதோடு 250 பேர் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், நிகழ்வு முழுவதும் மனுதாரர் மற்றும் காவல்துறை ஆகிய இரு தரப்பும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் நிகழ்வில் கலந்து கொள்வோரின் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டும் என பல நிபந்தனைகளை நீதிபதிகள் வித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்