கணவருக்கு 2வது திருமணம் செய்துவைத்ததால் மாமனாரை தீவைத்து எரிந்த மருமகள்...

கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால், ஆத்திரம் அடைந்த முதல் மனைவி தனது மாமனாரை எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவருக்கு 2வது திருமணம் செய்துவைத்ததால் மாமனாரை தீவைத்து எரிந்த மருமகள்...
x
திருவள்ளூர் மாவட்டம் நெமிலி கிராமத்தை சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் பிரபாகரன். இவருக்கும் சென்னையை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், பிரபாகரன் - காயத்ரி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சபாபதி தனது மகன் பிரபாகரனுக்கு திண்டிவனத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி, தனது தாயாருடன் சென்று சபாபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சபாபதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சபாபதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாமனாருக்கு மருமகள் தீவைத்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சபாபதியிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, பிரபாகரனின் முதல் மனைவி காயத்ரியும், அவரின் தாயார் கலைவாணியும் தன் மீது மண்ணென்ணெய் ஊற்றி தீவைத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சபாபதி உயிரிழந்துவிட்டதால், காயத்ரியையும், அவரின் தாயார் கலைவாணியையும் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்