கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கை ,4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த வந்தார்.இந்நிலையில் 2015ம் ஆண்டு இவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், அந்த வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என, கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாகவும், அதனால் நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நாமக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி இளத்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, கோகுல்ராஜ் வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.மேலும் 4  மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்