கால்நடை மருத்துவ படிப்பு - இன்று முதல் விண்ணப்பம்

கால்நடை மருத்துவ படிப்பில் சேர இன்று முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
கால்நடை மருத்துவ படிப்பு - இன்று முதல் விண்ணப்பம்
x
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டதைத் தொடர்ந்து பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று 8ஆம் தேதி முதல் www.tanuvas.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. பதிவு செய்யும் விண்ணப்ப நகலுடன் உரிய சான்றிதழ்களை சேர்த்து ஜூன் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் ஜூன் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஜூலை 9-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி.வி.எஸ்.சி., எனப்படும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 360 இடங்களும் பி.டெக்., படிப்புகளில் 100 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்