சேலம் : ஏரிக்குள் களைகட்டும் வெளிமாநில மது விற்பனை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏரியில் களைகட்டிய வெளிமாநில மது வகைகளை அங்கு சோதனை செய்த துணை ஆட்சியர் பறிமுதல் செய்தார்.
சேலம் : ஏரிக்குள் களைகட்டும் வெளிமாநில மது விற்பனை
x
தாரமங்கலத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. ரகசிய தகவலின் பேரில் வந்த துணை ஆட்சியர், சட்டவிரோத மது விற்பனை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. தகவலின் பேரில் வந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தனி அதிகாரிகள் வரும்போது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்