தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உரிய கட்டட வசதியின்றி இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மேலும் ஓராண்டு நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x
தனியார் பள்ளிகள் பல்வேறு துறைகளிடம் இருந்து உரிய அனுமதி சான்றிதழ்களை பெற வேண்டும் என்பதோடு அந்த அந்த உள்ளூர் அமைப்புகளிடமிருந்து கட்டட சான்றிதழ்களையும் பெற வேண்டும் என்பது தமிழக அரசின் விதிமுறையாகும். கட்டடத்திற்கு முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரக்கூடிய அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் தற்காலிக அங்கீகாரம் ஏற்கனவே ஒரு ஆண்டு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு ஆண்டு, அதாவது 2020 மே 31 வரை தற்காலிக அங்கீகாரத்தை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட கூடாது என்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2 ஆயிரம் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்