46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு ? - தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தகவல்

தமிழகத்தில் 46 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
x
கடந்த மாதம் 18ஆம் தேதி நடந்த மக்களவை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, பாப்பிரெட்டிபட்டி-8, பூந்தமல்லி -1, கடலூர் -1, தருமபுரி- 8, கடலூர் - 1, திருவள்ளூர் - 1 என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சத்ய பிரத சாஹு பரிந்துரைத்தார். இந்நிலையில், 46 வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை, குளறுபடிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு அறிக்கை அளித்துள்ளார். எனவே, 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்