கிரிக்கெட் மட்டையால் தலையில் தட்டியதால் ஏற்பட்ட விபரீதம் - மூளைச்சாவு அடைந்த இளைஞர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
கிரிக்கெட் மட்டையால் தலையில் தட்டியதால் ஏற்பட்ட விபரீதம் - மூளைச்சாவு அடைந்த இளைஞர் உயிரிழப்பு
x
அப்போது அவரது நண்பர் கார்த்திக் தன்னை ஏன் விளையாட அழைத்து வரவில்லை என கூறி கிரிக்கெட் மட்டையால் நந்தகுமார் தலையில் தட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மயங்கி விழுந்த நந்தகுமாரை அவரது நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளனர். மறுநாள் காலை கண் விழிக்காததால் நந்தகுமாரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில்அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.கவலைக்கிடமான நிலையில் இருந்த நந்தகுமார் உயிரிழந்ததையடுத்து கார்த்திக்கை கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்