மின்சார தடையால் மதுரை அரசு மருத்துவமனையில் 3 பேர் பலியானதாக தகவல்

மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 3 பேர் மின்தடை காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
x
மதுரையில் நேற்று கனமழை பெய்ததை தொடர்ந்து பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன், மல்லிகா, பழனியம்மாள் ஆகிய 3 நோயாளிகளுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே மின்தடை காரணமாக மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள லிப்ட்டும் நின்று போனது. அதில் சிக்கித் தவித்த 2 நோயாளிகளை அரைமணி நேரம் போராடி ஊழியர்கள் மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்