123வது மலர் கண்காட்சி அலங்கார பணி துவக்கம் - ரூ.30 லட்சம் மதிப்பில் மலர் மாடம்

ஊட்டியில் 123வது மலர் கண்காட்சியின் அலங்கார பணி தொடங்கப்பட்டது. இதில் பழைய மலர் மாடம் அகற்றப்பட்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மலர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது.
123வது மலர் கண்காட்சி அலங்கார பணி துவக்கம் - ரூ.30 லட்சம் மதிப்பில் மலர் மாடம்
x
ஊட்டியில் புகழ்பெற்ற 123-வது மலர் கண்காட்சி வரும் மே 17 முதல் மே 21 வரை நடைபெறுகிறது. இதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மலர் மாடம் அகற்றப்பட்டு 30 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மலர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்த அரசு தாவரவியல் பூங்காவில் அரங்கம் மற்றும் தனியார் பூங்காக்கள் அமைக்க டெண்ட்டும் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மலர் மாடத்தில் 15,000 மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலர் கண்காட்சி ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, எஸ்.பி. சண்முகப்பிரியா பார்வையிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்