என்.எல்.சி. ​நிறுவனத்துக்கு எதிராக சி.ஐ.டி.யூ. போராட்டம் - விதிகளை மீறி என்.எல்.சி. நிர்வாகம் செயல்படுவதாக புகார்

நெய்வேலியில் சி.ஐ.டி.யூ தொழிற் சங்கத்தினர் - போலீசார் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு உருவானது.
என்.எல்.சி. ​நிறுவனத்துக்கு எதிராக சி.ஐ.டி.யூ. போராட்டம் - விதிகளை மீறி என்.எல்.சி. நிர்வாகம் செயல்படுவதாக புகார்
x
சி.ஐ.டி.யூ. தொழிற் சங்க துணைத் தலைவர் திருஅரசு என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாக கூறி கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு முறை இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவரை ராஜஸ்தான் மாநிலம் பஸ்சிங்கர் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்து நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிற்சங்க விதிக்கு எதிராகவும் பழிவாங்கும் அடிப்படையில் நிர்வாகம் செயல்படுவதாகவும் தெரிவித்து  சி.ஐ.டி.யூ சார்பில் 'Q' பாலம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முறையான அனுமதி பெற்றதை தொழிற்சங்கத்தினர் காட்டியதை அடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்