40 ஆண்டுகளாக திருடி வந்தவர் கேரளாவில் கைது

பல்வேறு மாநிலங்களில் 40 ஆண்டுகளாக திருடி வந்த சென்னையை சேர்ந்த நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
40 ஆண்டுகளாக திருடி வந்தவர் கேரளாவில் கைது
x
பல்வேறு மாநிலங்களில் 40 ஆண்டுகளாக திருடி வந்த சென்னையை சேர்ந்த நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு எர்ணாகுளம் அருகே உள்ள பாலாரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் நுழைந்த ஒருவர் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளுடன் கொடுத்த புகாரின் பேரில், அந்த நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கேரளாவில் நேற்று அந்த திருடனை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், கோபி எனும் லாரன்ஸ் என்ற அவன், சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் 40 ஆண்டுகளாக திருடி வந்த அவன்,  தமிழகம், புதுவையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை குற்றவாளியாக சிறையில் இருந்துள்ளான். தமிழகத்தில் 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்