மின்சாரம் தாக்கி உயிர் தப்பிய குரங்கு...

சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு குரங்கு உயிர் பிழைத்த அதிசயம்.
x
சிதம்பரத்தில் மின்சாரம் தாக்கிய குரங்கு ஒன்று  விடா முயற்சியால் உயிர் தப்பித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்றில் ஆண் குரங்கு ஒன்று சென்ற போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியது.  இதில் உடல் முழுவதும் காயங்கள் உண்டான நிலையில் அந்த குரங்கு மயக்க நிலையில் டிரான்ஸ்பார்மரில் உள்ள இரும்பு கம்பியை  பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தது. இதனையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பிகளில் படாமல் அருகில் உள்ள கட்டிடத்திற்கு  குரங்கு தாவி குதித்து உயிர் தப்பியது.  

Next Story

மேலும் செய்திகள்