தற்கொலைக்கு முயன்றவருக்கு ஏற்றப்பட்ட காலாவதியான குளுக்கோஸ் : பெற்றோர் புகார்

ஓசூரைச் சேர்ந்த அருண் என்பவர், குடும்பத் தகராறில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
தற்கொலைக்கு முயன்றவருக்கு ஏற்றப்பட்ட காலாவதியான குளுக்கோஸ் : பெற்றோர் புகார்
x
ஓசூரைச் சேர்ந்த அருண் என்பவர், குடும்பத் தகராறில் விஷம் குடித்து தற்கொலைக்கு  முயன்றார்.  இதையடுத்து, அவர்  ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அருணுக்கு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக உறவினர்கள் குளுக்கோஸ் பாட்டிலை பார்த்தபோது, அது காலாவதியானது எனத் தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குளுக்கோஸ் ஏற்றப்படுவதை நிறுத்தினர். மேலும்,  ஏற்கெனவே செலுத்திய குளுக்கோஸ் பாட்டிலும் காலாவதியானது என தெரிந்தது. இதையடுத்து அருணின் பெற்றோர், காலாவதியான குளுக்கோஸ் ஏற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்