1500 ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு உள்ளிட்ட 3 கோரிக்கைகள் : தமிழக அரசுக்கு கெடு விதித்த ஜாக்டோ ஜியோ

ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1500 ஆசிரியர்களுக்கு வருகிற 25 ஆம் தேதிக்குள் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
1500 ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு உள்ளிட்ட 3 கோரிக்கைகள் : தமிழக அரசுக்கு கெடு விதித்த ஜாக்டோ ஜியோ
x
ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1500 ஆசிரியர்களுக்கு வருகிற 25 ஆம் தேதிக்குள் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், தியாகராஜன், அன்பரசு, உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தங்களது கோரிக்கைகளுக்கு, வருகிற 25 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கா விட்டால், 27ஆம் தேதி மீண்டும் சென்னையில் கூடி முக்கிய முடிவை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்