கடுமையாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு : மாநகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்

தூத்துக்குடியில் கடுமையாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி மாநகராட்சியை மக்கள் முற்றுகையிட்டனர்.
கடுமையாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு : மாநகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்
x
தூத்துக்குடியில் கடுமையாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி மாநகராட்சியை மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள சத்தியா நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்து சில மாதங்களாக அங்கு தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது.  குடிப்பதற்கு தண்ணீர் குடம் ஒன்றுக்கு 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரையில் வாங்கி குடிக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாக குற்றம் சாட்டிய மக்கள், மாநகராட்சியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தங்கள் பகுதியின் தண்ணீர் தட்டுபாட்டை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்